தமிழ் மதிப்பீடு யின் அர்த்தம்

மதிப்பீடு

பெயர்ச்சொல்

 • 1

  (செலவு, விலை, அளவு முதலியவை குறித்துச் செய்யும்) நிர்ணயம்.

  ‘மூன்று கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்தச் சுற்றுலா வளாகம் கட்டப்பட்டுவருகிறது’
  ‘இது தொழில் துவங்கத் தேவையான முதலீட்டுக்கான மதிப்பீடு’

 • 2

  (தேர்வுத்தாளை) திருத்தி உரிய மதிப்பெண் இடும் செயல்.

  ‘தேர்வுத்தாள் மதிப்பீட்டில் ஏதோ தவறு நடந்திருக்கிறது’
  ‘மாணவர்கள் தங்கள் தேர்வுத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய விரும்பினால் இன்னும் பத்து நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்’

 • 3

  ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் அல்லது கருத்து; விமர்சனப் பார்வை.

  ‘அவரைப் பற்றி உயர்ந்த மதிப்பீடு எதுவும் எனக்குக் கிடையாது’
  ‘இந்த நாவலாசிரியருக்கு வாழ்க்கையைப் பற்றிச் சுயமான பார்வை இல்லை என்பதே எனது மதிப்பீடு’

 • 4

  (பெரும்பாலும் பன்மையில்) சரியானவை, முறையானவை அல்லது சரியற்றவை, முறையற்றவை என்ற ரீதியில் சமூகமும் தனிநபர்களும் உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கை.

  ‘அதிகாரமும் சுயநலமும் மதிப்பீடுகளைக் குலைக்கின்றன’
  ‘உனது மதிப்பீடுகளை அடுத்தவர் மேல் சுமத்தாதே’
  ‘சமூகம் மாறுதலுக்கு உள்ளாகும்போது சமூக மதிப்பீடுகளும் மாறுகின்றன’