தமிழ் மந்தம் யின் அர்த்தம்

மந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் நடக்காத நிலை.

  ‘வேலை மந்தமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது’
  ‘உற்பத்தியில் மந்த நிலை’
  ‘மந்தமான வாக்குப்பதிவு’

 • 2

  ஊக்கமும் சுறுசுறுப்பும் இல்லாத தன்மை.

  ‘காலையிலிருந்து வேலைசெய்ய முடியவில்லை; மந்தமாக இருக்கிறது’
  ‘படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்திப் பாடம் சொல்லித்தர வேண்டும்’

 • 3

  (காது, புத்தி முதலியவை குறித்து வரும்போது) திறன் குறைவு.

  ‘அவருக்குக் காது சற்று மந்தம்’
  ‘அவனுக்குப் புத்தி மந்தம்; அவன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்’
  ‘கரடியின் நுட்பமான மோப்ப சக்தி அதன் மந்தமான பார்வையை ஈடுகட்டிவிடுகிறது’

 • 4

  பசியெடுக்காமலும் சாப்பிட்ட உணவு செரிக்காமலும் இருக்கும் அசௌகரிய உணர்வு.

  ‘காலையில் சாப்பிட்டது சரியாகச் செரிக்காததால் வயிறு மந்தமாக இருக்கிறது’