தமிழ் மனச்சோர்வு யின் அர்த்தம்

மனச்சோர்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஊக்கமும் உற்சாகமும் இழந்து, எதிலும் முழு மனத்தோடு ஈடுபட முடியாத வெறுமையுணர்வு மிகுந்த நிலை.

    ‘தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானேன்’
    ‘தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கை, அலுவலக வேலைகள் எல்லாம் சேர்ந்து அவளது மனச்சோர்வை அதிகப்படுத்திவிட்டன’