தமிழ் மனப்பால் குடி யின் அர்த்தம்

மனப்பால் குடி

வினைச்சொல்குடிக்க, குடித்து

  • 1

    தான் விரும்பியபடி ஒன்று நடக்கும் என்று வீணாக நம்பிக்கையை அல்லது ஆசையை வளர்த்துக்கொள்ளுதல்.

    ‘பிரேசில் அணியை வென்றுவிடலாம் என்று ஸ்பெயின் அணியினர் மனப்பால் குடித்தனர். கடைசியில் வெற்றி பிரேசில் அணிக்குதான்’
    ‘சினிமாவில் சேர்ந்து கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் மனப்பால் குடித்துக்கொண்டிருக்காதே’