தமிழ் மனம் யின் அர்த்தம்

மனம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவை இருக்கும், செயல்படும் களமாகக் கருதப்படுவது; உள்ளம்.

  ‘மனத்தை ஒருநிலைப்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தார்’
  ‘துக்கத்தால் மனம் கனத்தது’

 • 2

  விருப்பம்.

  ‘வீட்டுக்குத் திரும்ப மனம் இல்லாமல் நடந்தான்’
  ‘மனம்போல் வாழ்வு!’
  ‘இதைச் சாப்பிட எனக்கு மனம் இல்லை’

தமிழ் மீனம் யின் அர்த்தம்

மீனம்

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  மீனைக் குறியீடாகக் கொண்ட பன்னிரண்டாவது ராசி.

  ‘இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் உண்டு என்று சோதிடப் பத்திரிகையில் போட்டிருந்தது’