தமிழ் மனமொத்த யின் அர்த்தம்

மனமொத்த

பெயரடை

  • 1

    ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிற.

    ‘என் பெற்றோரைப் போன்ற மனமொத்த தம்பதியை எங்கும் பார்க்க முடியாது’
    ‘அவர்கள் இருவரும் மனமொத்த நண்பர்கள் என்பதில் சந்தேகம் என்ன?’