தமிழ் மனிதர் யின் அர்த்தம்

மனிதர்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரைக் குறிப்பிடும்போது) நபர்.

  ‘ஏன் அந்த மனிதர் இப்படித் திட்டுகிறார்?’
  ‘உனக்கு அந்த மனிதரைத் தெரியுமா?’

 • 2

  மனிதன் என்பதன் பன்மை.

  ‘மனிதரிலே அவரைப் போல் ஒருவரைக் காண்பது அரிது’
  ‘மனிதருள் மாணிக்கம்’