தமிழ் மயிரிழை யின் அர்த்தம்

மயிரிழை

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிடப்படும் ஒன்று நடந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் மிகக் குறைந்த வித்தியாசத்தில் அல்லது இடைவெளியில் அது நடக்காமல் போனது என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.

  ‘வெடிகுண்டு வீச்சிலிருந்து அமைச்சர் மயிரிழையில் தப்பினார்’
  ‘எங்கள் அணி கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் மயிரிழையில் தோற்றது’
  ‘ஒரு மயிரிழை பிசகியிருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்?’

 • 2

  மிகக் குறைந்த நுணுக்கமான அளவு.

  ‘ஒரு மயிரிழையின் ஐம்பது பாகத்தில் பத்து லட்சம் இணைப்புகள் கொண்ட சிலிக்கன் சில்லு பொருத்தப்படுகிறது’
  ‘சுருதிக்கும் குரலுக்கும் மயிரிழை அளவுகூட வேறுபாடு தெரியக் கூடாது’
  ‘கடைசியாய் ஒட்டிக்கொண்டிருந்த மயிரிழை ஆசைகூட அறுந்துவிட்டது’