தமிழ் மரை யின் அர்த்தம்

மரை

பெயர்ச்சொல்

  • 1

    (திருகாணி ஒரு பரப்பின் உள்ளே செல்வதற்காக) நுனியிலிருந்து மேல் நோக்கிச் சுற்றிச்சுற்றி செல்லும் குழிந்த கோடு.

    ‘மரை தேய்ந்துவிட்டதால் திருகாணியைப் பலகையில் பொருத்த முடியவில்லை’

  • 2

    திருகாணியை அது பொருத்தப்பட்ட பரப்பின் மறுபக்கத்தில் உறுதியாகப் பற்றியிருக்கும் சிறு வளையம்.

    ‘மரை கழன்று விழுந்துவிட்டது’