தமிழ் மறுபிறவி யின் அர்த்தம்

மறுபிறவி

பெயர்ச்சொல்

 • 1

  (இறந்து) மீண்டும் பிறப்பதாக நம்பும் பிறப்பு; அடுத்த பிறவி.

  ‘முத்தியடைந்தவருக்கு மறுபிறவி இல்லை என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன’

 • 2

  இனி பிழைப்பதற்குச் சாத்தியம் இல்லை என்பதிலிருந்து மீண்டுவரும் நிலை.

  ‘அவள் விபத்துக்குள்ளாகி உயிர்பிழைத்தது மறுபிறவிதான்’

 • 3

  (கீழ் நிலையிலிருந்தோ வீழ்ச்சிக்குப் பின்னோ பெறும்) எழுச்சிமிக்க அல்லது ஏற்றம்மிக்க நிலை; புத்துயிர்.

  ‘இந்தப் படத்தின் மூலம் அந்த நடிகைக்கு மறுபிறவி கிடைத்துள்ளது’
  ‘தமிழகத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் ரத்துசெய்யப்பட்ட மேலவை இப்போது மறுபிறவி எடுக்க வாய்ப்பே இல்லை’