தமிழ் மலங்கமலங்க யின் அர்த்தம்

மலங்கமலங்க

வினையடை

  • 1

    (பார், விழி ஆகிய வினைகளோடு வரும்போது) குழப்பத்தோடு ஒன்றும் புரியாமல்.

    ‘‘பணம் கொண்டு வந்திருக்கிறாயா?’ என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மலங்கமலங்க விழித்தான்’
    ‘வீட்டுக்கு வந்த விருந்தினர்களைக் குழந்தை மலங்கமலங்கப் பார்த்துக்கொண்டு நின்றது’