தமிழ் மலிவு யின் அர்த்தம்

மலிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பொருளின் விலை) குறைவு.

  ‘கோதுமை மலிவாகக் கிடைத்தால் இரண்டு மூட்டை வாங்கிப்போடலாம்’
  ‘இந்தத் துணி கொள்ளை மலிவு’
  ‘அலுமினியம் மிகவும் மலிவான உலோகம்’

 • 2

  தரமற்றது.

  ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மலிவான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடக் கூடாது’
  ‘இப்படி மலிவாகப் பேசுவதை முதலில் நிறுத்து’
  ‘மலிவான காட்சிகள் நிறைந்த திரைப்படம்’
  ‘மலிவான வெளிநாட்டுப் பத்திரிகைகள்’