மலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மலை1மலை2

மலை1

வினைச்சொல்மலைக்க, மலைத்து

 • 1

  (எதிர்பாராத ஒன்றால் அல்லது ஒன்றின் பிரம்மாண்டமான தன்மையால்) விளங்கிக்கொள்ள முடியாத வியப்புக்கு உள்ளாதல்.

  ‘பிரபலக் கலைஞர்களே மலைக்கும் அளவுக்கு அந்தச் சிறுவன் பாடினான்’

 • 2

  என்ன செய்வது என்று தெரியாத செயலற்ற நிலைக்கு உள்ளாதல்; திகைத்தல்.

  ‘‘இவ்வளவு வேலையையும் ஒரே நாளில் முடிக்க வேண்டுமா?’ என்று மலைத்துப்போய்க் கேட்டான்’

மலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மலை1மலை2

மலை2

பெயர்ச்சொல்

 • 1

  (பூமியின் மேற்பரப்பில்) மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதி.