தமிழ் மலைபோல் யின் அர்த்தம்

மலைபோல்

வினையடை

  • 1

    (‘நம்பு’ என்ற சொல்லோடு வரும்போது) (ஒருவர்மீது வைத்துள்ள நம்பிக்கை) அசைக்க முடியாத அளவுக்கு; சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில்.

    ‘பெண்ணின் திருமணத்துக்கு நாள் குறித்துவிட்டேன். பணத்துக்கு உங்களைத்தான் மலைபோல் நம்பியிருக்கிறேன்’
    ‘மகனின் வேலைக்கு நண்பரைத்தான் மலைபோல் நம்பியிருக்கிறேன். எப்படியும் வாங்கிக்கொடுத்துவிடுவார்’