தமிழ் மீள யின் அர்த்தம்

மீள

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மீண்டும்; மறுபடியும்.

  ‘அகதிகளை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் போராடிவருகிறோம்’

தமிழ் மீள் யின் அர்த்தம்

மீள்

வினைச்சொல்மீள, மீண்டு, மீட்க, மீட்டு

 • 1

  உயர் வழக்கு (முன்பு இருந்த இடத்துக்கு) திரும்புதல்.

  ‘பல தேசங்களையும் வென்று இராஜேந்திர சோழன் நாடு மீண்டான்’

 • 2

  பழைய நிலையை அடைதல்.

  ‘இந்தத் தசைகள் சுருங்கிப் பின் மீளும் தன்மை கொண்டவை’

 • 3

  (ஆபத்து, நோய் போன்றவற்றின் பாதிப்பு நீங்கி) உயிர்பிழைத்தல்; தப்பித்தல்.

  ‘சுனாமியின்போது கடல் அலையில் சிக்கி மீணட சிறுமி இவள்’
  ‘கடுமையான மஞ்சள் காமாலையிலிருந்து நான் மீண்டதே ஒரு அதிசயம்தான்’

 • 4

  (ஒரு மோசமான நிலை, பாதிப்பு போன்றவற்றிலிருந்து) விடுபடுதல் அல்லது நீங்குதல்.

  ‘அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை’
  ‘மீளாத் துயரில் ஆழ்ந்தார்’
  ‘அவருடைய பிடியிலிருந்து மீள முடியவில்லை’
  ‘ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீண்டான்’
  ‘தொடக்க ஆட்டக்காரரின் சதத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது’

தமிழ் மீள் யின் அர்த்தம்

மீள்

வினைச்சொல்மீள, மீண்டு, மீட்க, மீட்டு

 • 1

  (விபத்து, ஆபத்து, அழிவு முதலியவற்றிலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை) காப்பாற்றுதல்.

  ‘பெரியவர் கிணற்றில் குதித்துச் சிறுவனை மீட்டார்’
  ‘விமான விபத்தில் சிக்கியவர்களின் உடலைக் காவலர்கள் மீட்டனர்’
  ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கடலில் மூழ்கிய சீனக் கப்பல் ஒன்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுத்துவருகிறது’
  ‘இன்றைய கால்பந்து போட்டியில் ரொனால்டினோ திறமையாக விளையாடி பிரேசில் அணியைச் சரிவிலிருந்து மீட்டார்’
  ‘என் வாழ்வில் பல நேரங்களில் என்னைத் துன்பங்களிலிருந்து மீட்டது என் நண்பன்தான்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரை ஒன்றிடமிருந்தோ ஒருவருடமிருந்தோ) விடுவித்தல் அல்லது விடுவித்து உரியவர்களை அடையச் செய்தல்.

  ‘கடத்தப்பட்ட சிலையை மீட்க நடவடிக்கை’
  ‘கொள்ளைக்காரனிடமிருந்து குழந்தையை மீட்டனர்’
  ‘நம் எல்லைப் பகுதியை மீட்கத்தான் இந்தப் போர்’

 • 3

  (அடகு அல்லது ஈடு வைத்ததை, முதலீட்டை) திரும்பப் பெறுதல்.

  ‘வீட்டை இந்த வருடமாவது மீட்க வேண்டும்’

தமிழ் மீள் யின் அர்த்தம்

மீள்

பெயரடை

 • 1

  (கலை, இலக்கியம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) மறுபடியும் அல்லது மீண்டும் செய்யப்படும்; மறு.

  ‘மீள் பார்வை/ இந்த நாவலைக் குறித்த மீள் வாசிப்பு வேண்டும்/ மீள் ஆய்வு/ மீள் நோக்கு/ மீள் கண்டுபிடிப்பு/ மீள் பதிப்பு.’