தமிழ் மாடாக உழை யின் அர்த்தம்

மாடாக உழை

வினைச்சொல்உழைக்க, உழைத்து

  • 1

    (தகுந்த பலன் இல்லாதபோதும்) கஷ்டப்பட்டுக் கடுமையாக உழைத்தல்.

    ‘நாள் முழுவதும் மாடாக உழைத்தாலும் கிடைப்பதென்னவோ நூறு ரூபாய் கூலிதான்’
    ‘நானும் முப்பது வருடமாக இந்தக் குடும்பத்தில் மாடாக உழைத்துக் கண்ட பலன் என்ன?’