தமிழ் மாதம் யின் அர்த்தம்

மாதம்

பெயர்ச்சொல்

 • 1

  ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த (பெரும்பாலும் 30 நாட்களைக் கொண்ட) பிரிவுகளுள் ஒன்று.

  ‘அடுத்த மாதம் அவர் வெளிநாடு போகிறார்’
  ‘புதிய வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன’

 • 2

  (பொதுவாக) கருத்தரித்த நாளிலிருந்து பிரசவிக்கும் நாள்வரையிலான நாட்களைப் பத்தாகப் பகுத்த பிரிவுகளுள் ஒரு பிரிவு; (குறிப்பாக) பிரசவிக்கும் பத்தாவது மாதம்.

  ‘மருமகளுக்கு இது மூன்றாவது மாதம்’
  ‘உன் மனைவிக்கு இதுதான் மாதமா?’