தமிழ் மானத்தைக் கப்பலேற்று யின் அர்த்தம்

மானத்தைக் கப்பலேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    ஒருவரின் மதிப்பையும் கௌரவத்தையும் கெடுத்தல்.

    ‘இந்தக் கிழிந்த சட்டையோடு கல்யாணத்துக்கு வந்து என் மானத்தைக் கப்பலேற்றாதே’
    ‘என் சொந்தத் தம்பியே என்மீது வழக்கு போட்டுக் குடும்ப மானத்தைக் கப்பலேற்றிவிட்டான்’