தமிழ் மார்க்கம் யின் அர்த்தம்

மார்க்கம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு வழி.

  ‘அந்தக் காலத்தில் கடல் மார்க்கமாகத்தான் இலங்கைக்குச் செல்ல முடியும்’

 • 2

  அருகிவரும் வழக்கு தடம்.

  ‘இருபத்தொன்பதாம் எண்ணுள்ள பேருந்து புதிய மார்க்கத்தில் விடப்படும்’

 • 3

  கடைப்பிடிக்கும் வழி.

  ‘பக்தி மார்க்கம்’
  ‘ஞான மார்க்கம்’

 • 4

  இஸ்லாமிய வழக்கு
  மதம்.