தமிழ் மாறுபடு யின் அர்த்தம்

மாறுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  மாற்றம் தெரியும்படி காணப்படுதல்; வேறுபடுதல்.

  ‘கணிப்பொறி செயல்படும் விதம் மனித மூளை செயல்படுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது’
  ‘நிறத்தில்தான் துணி மாறுபட்டதே தவிர தரத்தில் ஒன்றுதான்’
  ‘வழக்கமான ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலிருந்து இது மாறுபட்ட பத்திரிகை’

 • 2

  எதிராக இருத்தல்; முரண்படுதல்.

  ‘திட்டத்தின் விளைவு திட்டத்தின் நோக்கத்துக்கே மாறுபட்டதாக இருந்தது’

 • 3

  மாற்றம்பெறுதல்.

  ‘சமூக அமைப்புகள் மாறுபடும்போது மொழியும் மாறுபடுகிறது’