தமிழ் மாள் யின் அர்த்தம்

மாள்

வினைச்சொல்மாள, மாண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு இறத்தல்; சாதல்.

  ‘காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மாண்டனர்’
  ‘மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை’

தமிழ் மாள் யின் அர்த்தம்

மாள்

வினைச்சொல்மாள, மாண்டு

 • 1

  (எதிர்மறை வடிவங்களில் அல்லது எதிர்மறைத் தொனியில் பயன்படுத்தும்போது) இயலுதல்; முடிதல்.

  ‘மக்கள் குடிநீருக்காகப் படும் வேதனை சொல்லி மாளாது’
  ‘இவர்களைப் பற்றி எழுதி மாளுமா?’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறையில் வரும்போது) நீங்குதல்.

  ‘மாளாத் துயர்’
  ‘மாளாத் துன்பம்’