தமிழ் மிகு யின் அர்த்தம்

மிகு

வினைச்சொல்மிக, மிகுந்து

 • 1

  (அளவில், எண்ணிக்கையில்) அதிகமாதல்; அதிகரித்தல்.

  ‘ஆற்றில் வெள்ளம் மிகவே போக்குவரத்து தடைப்பட்டது’
  ‘வீட்டில் எலிகள் மிகுந்துவிட்டன’

 • 2

  (குறிப்பிட்ட அளவை) தாண்டிச்செல்லுதல் அல்லது கடந்துசெல்லுதல்.

  ‘ஒவ்வொரு கேள்விக்கும் ஐந்து வரிகளுக்கு மிகாமல் விடை தருக!’
  ‘குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்து பேருக்கு மிகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்’

 • 3

  இலக்கணம்
  (எழுத்து) இரட்டித்தல்.

  ‘இகர ஈற்று வினையெச்சத்தின் பின் ஒற்று மிகும்’