மிதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மிதி1மிதி2

மிதி1

வினைச்சொல்மிதிக்க, மிதித்து

 • 1

  (பாதத்தின் அடிப்பகுதி படும் வகையில் ஒன்றின் மீது) வேகத்துடன் காலை இறக்குதல்.

  ‘சாணியை மிதித்துவிடாதே. பார்த்து நடந்து வா!’
  ‘சண்டையில் அவனைக் கீழே தள்ளி நெஞ்சில் மிதித்தான்’
  ‘சுவர் வைப்பதற்காகச் சேற்றைக் குழைத்து மிதித்துக்கொண்டிருந்தான்’

 • 2

  (மிதிவண்டியை இயங்கச் செய்வதற்காக அதற்கான பாகத்தில்) காலை வைத்து விசையுடன் அழுத்துதல்.

  ‘மழை வருவதுபோல இருந்ததால் சைக்கிளை வேகமாக மிதித்தான்’
  ‘அந்த மேட்டில் சைக்கிளை மிதித்து வருவதற்குள் வியர்த்துக்கொட்டிவிட்டது’

மிதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மிதி1மிதி2

மிதி2

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின் மீது பலத்துடனும் வேகத்துடனும்) காலைப் பதிக்கும் செயல்.

  ‘ஒரே மிதியில் யானை தேங்காயை நொறுக்கிவிட்டது’