தமிழ் மின்னு யின் அர்த்தம்

மின்னு

வினைச்சொல்மின்ன, மின்னி

 • 1

  மின்னல் பளீரெனத் தோன்றுதல்.

  ‘மின்னுகிறதே, மழை வரும் போலிருக்கிறது!’

 • 2

  (ஒன்றின் மேல்) ஒளி பட்டுப் பளபளத்தல்; விட்டுவிட்டு ஒளிர்தல்.

  ‘சூரிய ஒளியில் அவள் கேசம் மின்னியது’
  ‘சாணை தீட்டியவுடன் கத்தி பளபளவென்று மின்னியது’

 • 3

  ஒளிர்தல்.

  ‘இருட்டில் பூனையின் கண்கள் மின்னின’

 • 4

  (கண்களில் அல்லது முகத்தில் ஆர்வம், ஆசை முதலியவை) தெளிவாகப் புலப்படும் வகையில் வெளிப்படுதல்; மிளிர்தல்.

  ‘அவன் சொன்ன கதையைக் கண்களில் சுவாரசியம் மின்னக் கேட்டுக்கொண்டிருந்தது குழந்தை’