முகம்கொடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முகம்கொடு1முகம்கொடு2

முகம்கொடு1

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (உறவு, நட்பு முதலியவற்றின் அடையாளமாக ஒருவரிடம்) இன்முகம் காட்டி மரியாதையைத் தெரிவித்தல்.

  ‘அவர் என்னிடம் முகம்கொடுத்துப் பேசி வெகுநாளாகிறது என்று வருத்தப்பட்டுக்கொண்டாள்’
  ‘தன் கணவனின் நண்பர்கள் வீட்டுக்கு வரும்போது அவள் முகம்கொடுத்து உபசரிப்பதில்லை’
  ‘இப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் முகம்கொடுத்துக்கூடப் பேசுவதில்லை’
  ‘இரு தலைவர்களும் அருகருகே அமர்ந்திருந்தாலும் விழா முடியும்வரை ஒருவருக்கொருவர் முகம்கொடுத்துப் பேசிக்கொள்ளவில்லை’

முகம்கொடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முகம்கொடு1முகம்கொடு2

முகம்கொடு2

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பிரச்சினை போன்றவற்றை) எதிர்கொண்டு சமாளித்தல்.

  ‘என்னுடைய பிரச்சினைக்கு நான்தானே முகம்கொடுக்க வேண்டும்’
  ‘எத்தனை பிரச்சினைகளுக்குத்தான் இந்தக் குடும்பம் முகம்கொடுத்துக் கொண்டு இருக்கும்?’