முகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முகம்1முகம்2

முகம்1

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதரில், விலங்குகளில்) கண், மூக்கு, வாய் முதலியவை அமைந்திருக்கிற பகுதி.

  ‘முகம் பார்க்கும் கண்ணாடி’
  ‘சிங்க முகம் பொறித்த நாணயம்’

 • 2

  (குத்துவிளக்கு போன்றவற்றில்) திரியிட்டு எரிக்கும் பகுதி.

  ‘ஐந்து முக விளக்கு’
  ‘வாசலைப் பார்க்கும்படி விளக்கின் முகத்தைத் திருப்பிவை’

 • 3

  இயல்பு; சுபாவம்.

  ‘இது அவளுடைய உண்மையான முகம் இல்லை’

 • 4

  பட்டையாகவோ சதுரமாகவோ இருக்கும் பரப்பு.

  ‘பகடைக்காய்க்கு ஆறு முகங்கள் உள்ளன’
  ‘தாயக்கட்டைக்கு நான்கு முகங்கள்’

முகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முகம்1முகம்2

முகம்2

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பெயரெச்சத்தின் பின்) ‘விதம்’, ‘வண்ணம்’ என்ற பொருளில் பெயர்ச்சொற்களை வினையடை ஆக்கும் இடைச்சொல்.

  ‘வரி கட்டாமல் ஏய்ப்பவர்களை எச்சரிக்கும் முகமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது’
  ‘கடற்கரைக்கு மக்கள் வந்தமுகமாக இருந்தனர்’