தமிழ் முட்டிக்கொண்டு வா யின் அர்த்தம்

முட்டிக்கொண்டு வா

வினைச்சொல்வர, வந்து

 • 1

  (அழுகை, கோபம் போன்ற உணர்ச்சிகள் அல்லது சிறுநீர்) அடக்க முடியாமல் வெளிப்படும் நிலையை அடைதல்.

  ‘ஆசைஆசையாக வாங்கிய புடவையை வீட்டுக்கு வந்து பிரித்துப்பார்த்தபோது அதில் ஒரு கிழிசல் இருப்பதைக் கண்டதும் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது’
  ‘அம்மா என்ன சொல்லிவிட்டாள் என்று உனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது?’
  ‘ஏன் இந்தச் சாதாரண விஷயத்துக்கு உனக்குக் கோபம் முட்டிக்கொண்டு வருகிறது?’
  ‘வகுப்பு நடக்கும் போது சிறுநீர் முட்டிக்கொண்டு வரவே மிகவும் அவதிப்பட்டுவிட்டான்’