தமிழ் முடுக்கு யின் அர்த்தம்

முடுக்கு

வினைச்சொல்முடுக்க, முடுக்கி

 • 1

  (பொம்மை, இயந்திரம் முதலியவற்றை இயக்குவதற்காக) விசை, சாவி போன்றவற்றைத் திருகுதல்.

  ‘பொம்மை காரில் சாவியை நுழைத்து முடுக்கினான்’

 • 2

  (திருகாணி முதலியவற்றை) உட்செலுத்துதல்/உட்செலுத்துவதன் மூலம் ஒன்றைப் பொருத்துதல்.

  ‘மரை தேய்ந்திருப்பதால் ஆணியைச் சரியாக முடுக்க முடியவில்லை’
  ‘அலமாரிக் கதவின் உட்புறத்தில் பூட்டை முடுக்கினேன்’

 • 3

  (வண்டியில் பூட்டியிருக்கும் மாடு, குதிரை போன்றவற்றை) வேகமாகச் செல்லும்படி செய்தல்.

  ‘மாட்டை முடுக்கிவிட்டதும் வேகம் அதிகரித்தது’

தமிழ் முடுக்கு யின் அர்த்தம்

முடுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  அகலக் குறைவான வழி; சந்து.

  ‘தெருவிலிருந்து வீட்டுக்குப் போகும் முடுக்கு இருண்டுகிடந்தது’

 • 2

  வட்டார வழக்கு மூலை.

  ‘தெரு முடுக்கில் ஒரு பெட்டிக்கடை’