தமிழ் முத்திரை பதி யின் அர்த்தம்

முத்திரை பதி

வினைச்சொல்பதிக்க, பதித்து

  • 1

    (ஒரு துறையில்) தன்னுடைய தனித்தன்மையை விளங்கச் செய்தல் அல்லது நிலைநாட்டுதல்.

    ‘சின்னத்திரையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது’
    ‘தகவல் தொழில்நுட்பத் துறையில் முத்திரை பதித்துள்ள நிறுவனம்’