தமிழ் முதுமை யின் அர்த்தம்

முதுமை

பெயர்ச்சொல்

  • 1

    வயதாகி, உடல் கட்டுத் தளர்ந்து, புலன்களின் செயல்பாடு குறைந்த நிலை; மூப்பு.

    ‘தாத்தா தன் முதுமைக் காலத்தில் பொடி போடுவதை விட்டுவிட்டார்’
    ‘முதுமையின் காரணத்தால் மறதியும் பேசியதையே திரும்பத்திரும்பப் பேசும் குணமும் பாட்டிக்கு வந்துவிட்டன’