தமிழ் முத்தம் யின் அர்த்தம்

முத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (அன்பு, காதல் முதலியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒருவர் மற்றொருவரின் கன்னம், உதடு முதலிய பகுதிகளில் அல்லது ஒரு பொருளில்) உதட்டைப் பதித்தல்.

    ‘முத்தம் கொடுக்கச் சொன்னால் குழந்தை என் கன்னத்தைக் கடித்துவிட்டது’
    ‘‘பிரியமானவளுக்கு என் அன்பு முத்தங்கள்’ என்று கடிதத்தை ஆரம்பித்தான்’
    ‘ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற வீராங்கனை பதக்கத்துக்கு முத்தம் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படம்’