தமிழ் முன்னறிவிப்பு யின் அர்த்தம்

முன்னறிவிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும் செயல் அல்லது நடவடிக்கை.

  ‘தேர்வுகளை முன்னறிவிப்பின்றி ஒத்திவைத்துவிட்டார்கள்’
  ‘அடகு வைத்த நகையை முன்னறிவிப்பு இல்லாமல் ஏலம் போட முடியாது’

 • 2

  (வானிலை இவ்வாறு இருக்கக்கூடும் என்று) முன்கூட்டியே கணித்துத் தெரிவிக்கும் செயல்.

  ‘கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்யும் என்பது இன்றைய வானிலை முன்னறிவிப்பு’