தமிழ் முன்னுரிமை யின் அர்த்தம்

முன்னுரிமை

பெயர்ச்சொல்

  • 1

    (பலவற்றுள் ஒன்றுக்கு அல்லது பலரில் ஒருவருக்கு) சிறப்பு, தேவை முதலியவற்றைக் கருதி அளிக்கப்படும் அதிகமான முக்கியத்துவம் அல்லது சலுகை.

    ‘அரசின் திட்டங்களில் வேளாண்மைக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது’
    ‘பகுதிநேர வேலைகளில் பெரும்பாலும் பெண்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது’
    ‘இந்தப் பத்திரிகையில் திரைப்படங்களைக் குறித்த செய்திகளுக்குதான் முன்னுரிமை’