தமிழ் முன்னோட்டம் யின் அர்த்தம்

முன்னோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    பின்னர் பெரிய அளவில் நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் மாதிரி நிகழ்வாகச் செய்யப்படுவது; ஒன்றின் செயல்பாடு முதலியவற்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு நிகழ்த்தப்படும் மாதிரிப் பரிசோதனை.

    ‘வரும் பொதுத்தேர்தல்பற்றிய முன்னோட்ட ஆய்வு’
    ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் வருகைக்குப் போதுமானதா என்பதை அறியக் காவல்துறையினர் முன்னோட்டம் பார்த்தனர்’
    ‘வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தலைக் கருதலாம்’