தமிழ் முன்யோசனை யின் அர்த்தம்

முன்யோசனை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றின் விளைவுகுறித்து அல்லது நடக்கப்போவதுகுறித்துத் தயாராக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனை.

    ‘காலையிலேயே மப்பும்மந்தாரமுமாக இருந்ததால் முன்யோசனையுடன் குடை கொண்டுவந்திருந்தான்’
    ‘முன்யோசனை இல்லாமல் கடன் வாங்கிவிட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்?’