தமிழ் முற்போக்கு யின் அர்த்தம்

முற்போக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஆதரித்தும் காலத்துக்கு ஒவ்வாத மரபான நடைமுறைகளை விலக்கியும் செயல்படும் போக்கு.

  ‘அந்தக் காலத்திலேயே விதவைத் திருமணத்தைப் பற்றி பாரதிதாசன் முற்போக்காக எழுதினார்’
  ‘வரதட்சிணை ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்று முற்போக்கான மாற்றங்களைப் பற்றி மேடையில் பேசினார்’

 • 2

  இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட அல்லது அவற்றை ஆதரிக்கும் போக்கு.

  ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’
  ‘தனது நாவல்களில் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த முற்போக்கு எழுத்தாளர் இவர்’