முளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முளை1முளை2முளை3

முளை1

வினைச்சொல்முளைக்க, முளைத்து

 • 1

  (தாவரம் பூமியிலிருந்து) புதிதாகக் கிளம்பி வெளியே வருதல்; (தாவரத்தில் இலைகள், வேர்கள்) தோன்றுதல்.

  ‘வயலில் போட்ட உளுந்து முளைத்துவிட்டது’
  ‘இந்த வறண்ட பூமியில் புல்கூட முளைக்காது’
  ‘ஊன்றிய ரோஜாக் கன்று முளைக்க ஆரம்பித்துவிட்டது’
  ‘சல்லிவேர்கள் கொத்துகொத்தாக முளைக்கின்றன’
  உரு வழக்கு ‘இந்த ஆள் எங்கிருந்து முளைத்தான் என்று எல்லாரும் கேள்விக்குறியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்’

 • 2

  (உடலில் ஓர் உறுப்பு, முடி அல்லது உறுப்பில் ஒன்று) புதிதாக வளர்தல்.

  ‘குழந்தைக்குப் பல் முளைக்கிறது’
  ‘இறக்கை முளைத்துவிட்டால் பறவைகள் பறக்கத் தொடங்கிவிடும்’
  ‘கன்றுக்குட்டிக்கு அதற்குள் எப்படிக் கொம்பு முளைக்கும்?’
  ‘மீசை முளைக்க ஆரம்பித்தபோதே எனக்குள் கவிதையும் காதலும் அரும்பிவிட்டன’

 • 3

  (நிலவு, நட்சத்திரம் போன்றவை வானில்) உதித்தல்; தோன்றுதல்.

  ‘வானில் இன்னும் வெள்ளி முளைக்கவில்லை’
  ‘முன்னிரவு நேரம், வானில் முழுநிலவு முளைத்திருந்தது’

 • 4

  (ஒரு இடம், அமைப்பு, நிலை முதலியவற்றில் ஒன்று) தோன்றுதல்; உருவாதல்.

  ‘மாம்பலம் பகுதியில் எண்ணற்ற ஜவுளிக் கடைகள் முளைத்திருக்கின்றன’
  ‘அணையின் உயரத்தை உயர்த்துவதற்குப் பல இடங்களில் எதிர்ப்பு முளைத்திருக்கிறது’
  ‘நான் நினைத்தது போலவே பிரச்சினை முளைத்தது’
  ‘நாளுக்கொரு ஜாதிக் கட்சி முளைக்கிறது’

முளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முளை1முளை2முளை3

முளை2

பெயர்ச்சொல்

 • 1

  (விதையிலிருந்து) புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி.

  ‘பயற்றின் முளை நீரில் பளபளத்தது’

 • 2

  (உடலில் தோன்றும் கட்டியினுள்) வேர் போல இருக்கும் பகுதி.

  ‘கட்டி உடைந்தாலும் முளை வெளியே வரவில்லை’

முளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முளை1முளை2முளை3

முளை3

பெயர்ச்சொல்

 • 1

  கூர்மையான நுனி உடைய சிறிய மரத் துண்டு.

  ‘கன்றுக்குட்டியை இழுத்து முளையில் கட்டு’
  ‘முளை அடித்துக் கூடாரத் துணியைக் கட்டினார்கள்’