தமிழ் முழுக்குப்போடு யின் அர்த்தம்

முழுக்குப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஒன்றுடன் அல்லது ஒருவருடன்) இதுவரை கொண்டிருந்த தொடர்பு, ஈடுபாடு போன்றவற்றைத் துண்டித்துக்கொள்ளுதல்; (விருப்பமின்மை அல்லது இயலாமையின் காரணமாக ஒன்றை) மேற்கொண்டு தொடராமல் நிறுத்திக்கொள்ளுதல்.

    ‘தன் பேச்சை யாரும் கேட்கவில்லை என்ற கோபத்தில் சங்கத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டார்’
    ‘படிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் தந்தையின் தொழிலில் இறங்கிவிட்டான்’