தமிழ் முழுமை யின் அர்த்தம்

முழுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை; நிறைவு.

  ‘ஓவியத்தை முழுமையாக வரைந்துவிடு. பாதியில் நிறுத்திவிடாதே’
  ‘நூல் முழுமை பெறவில்லை’
  ‘மக்கள் புரட்சியை முழுமையாக ஒடுக்கிவிட முடியாது’
  ‘பெற்றோரின் முழுமையான சம்மதத்துடன்தான் எங்கள் திருமணம் நடந்தது’
  ‘என்னைப் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்’
  ‘இது சிலப்பதிகாரம் முழுமைக்குமான உரை’
  ‘எல்லாத் துறைகளிலும் இப்போது கணிப்பொறி முழுமையாக ஊடுருவிவிட்டது’
  ‘‘முத்தொள்ளாயிரம்’ என்ற நூல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை’