தமிழ் முழு அடைப்பு யின் அர்த்தம்

முழு அடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றிற்குக் கண்டனம், எதிர்ப்பு, அனுதாபம் போன்றவற்றைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு) அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டும் நடக்கும் போராட்டம்.

    ‘தமிழகம் முழுவதும் நடந்த முழு அடைப்பை ஒட்டி வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன’
    ‘நாளை நடக்கவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்’