தமிழ் மூட்டை கட்டிவை யின் அர்த்தம்

மூட்டை கட்டிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (ஒன்றை) இனி வேண்டாம் என்றோ அல்லது தற்போதைக்கோ ஒதுக்கிவைத்தல்.

  ‘விளையாட்டை ஒரு மாதத்துக்கு மூட்டை கட்டிவை. பரீட்சை முடிந்ததும் விளையாடிக்கொள்ளலாம்’
  ‘பெண் கல்யாணம் முடிகிறவரை மற்ற வேலைகளை மூட்டை கட்டிவைக்க வேண்டும்’
  ‘சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால் படிப்பை மூட்டை கட்டிவைத்துவிட்டு விவசாயத்தைப் பார்க்க ஆரம்பித்தான்’
  ‘கதை எழுதுவதை மூட்டை கட்டிவைத்து ரொம்ப நாள் ஆகிறது’