தமிழ் மூடி யின் அர்த்தம்

மூடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் தட்டுப் போன்ற பாகம்.

    ‘ஜாடியை ஏன் தட்டால் மூடியிருக்கிறாய்? அதன் மூடி எங்கே?’

  • 2

    (பேனா போன்றவற்றில்) மேல்பகுதியைப் பாதுகாக்கச் செருகி மூடும் அமைப்பு.

    ‘பேனாவின் மூடியைக் கழற்றி வைத்துவிட்டு எழுத ஆரம்பித்தான்’