தமிழ் மூலதனம் யின் அர்த்தம்

மூலதனம்

பெயர்ச்சொல்

  • 1

    தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்.

    ‘பத்து கோடி ரூபாய் மூலதனத்தில் நிறுவப்பட்ட தொழிற்சாலை’
    ‘உலகமயமாக்கலின் விளைவாக இந்தியாவில் அந்நிய மூலதனம் பல மடங்கு கூடியிருக்கிறது’
    ‘உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்’