தமிழ் மூளை யின் அர்த்தம்

மூளை

பெயர்ச்சொல்

 • 1

  மண்டையோட்டினுள் அமைந்திருப்பதும் சிந்தித்தல், உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதுமான உறுப்பு.

  ‘காலில் முள் குத்தியவுடன் நரம்பின் மூலம் மூளைக்குச் செய்தி சென்று, பிறகுதான் வலியை நாம் உணர்கிறோம்’

 • 2

  அறிவு; சிந்திக்கும் திறன்.

  ‘மூளை இருந்தால் இப்படிச் செய்வாயா?’
  ‘அவருக்கு இருக்கும் மூளையில் கால் பங்கு நமக்கு இருந்தால் போதும்!’