தமிழ் மூழ்கு யின் அர்த்தம்

மூழ்கு

வினைச்சொல்மூழ்க, மூழ்கி

 • 1

  நீரின் மேற்பரப்பிலிருந்து கீழே செல்லுதல்; முழுகுதல்.

  ‘என் அண்ணன் இக்கரையில் மூழ்கினால் நீருக்குள்ளேயே நீந்தி அக்கரைக்குப் போய்விடுவான்’
  ‘பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன’

 • 2

  (உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னை) தீவிரமாகவோ அதிகமாகவோ உட்படுத்திக்கொள்ளுதல்; ஆழ்தல்; அமிழ்தல்.

  ‘பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார்’
  ‘வேலையில் மூழ்கிவிட்டால் என் கணவர் வீட்டை மறந்துவிடுவார்’
  ‘நேருவின் மரணத்தினால் நாடே துயரத்தில் மூழ்கியது’

 • 3

  (ஒரு பொருள், வீடு போன்றவை கடனில்) முழுகுதல்.

  ‘வீடு கடனில் மூழ்கப்போவதை நினைத்து அம்மா அழுதுகொண்டிருந்தாள்’
  ‘நாடு கடனில் மூழ்காமல் இருக்கத்தான் இந்த நடவடிக்கைகள்’