தமிழ் மெச்சு யின் அர்த்தம்

மெச்சு

வினைச்சொல்மெச்ச, மெச்சி

  • 1

    பாராட்டுதல்; புகழ்தல்.

    ‘குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய அந்தச் சிறுவனின் தீரத்தை மெச்சாதவர்கள் இல்லை’
    ‘‘உன் திறமையை நீயேதான் மெச்சிக்கொள்ள வேண்டும்’ என்று தங்கை என்னைக் கிண்டல்செய்தாள்’
    ‘இது உண்மையிலேயே மெச்சத் தகுந்த சாதனைதான்’