தமிழ் மெய்க்கீர்த்தி யின் அர்த்தம்

மெய்க்கீர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    அரசனுடைய பரம்பரை, அடைந்த வெற்றி, ஆட்சிக் காலம் முதலியவற்றைப் பாடல் வடிவில் தெரிவிக்கும், கல்லில் பொறித்த வரலாற்றுச் செய்தி/அந்தச் செய்தி பொறிக்கப்பட்ட கல்.

  • 2

    உயர் வழக்கு (இறைவன், அரசர் போன்றோரின்) புகழ்.

    ‘துதி பாடுபவர்கள் அரசனின் மெய்க்கீர்த்தியைப் பாடி அவனை வரவேற்றனர்’