மொய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொய்1மொய்2

மொய்1

வினைச்சொல்மொய்க்க, மொய்த்து

 • 1

  (ஈ, கொசு முதலியவை கூட்டமாக ஒன்றை அல்லது ஒன்றில்) சுற்றிச்சூழ்தல் அல்லது சூழ்ந்திருத்தல்.

  ‘தேனை எறும்பு மொய்க்க விட்டுவிட்டாயே’
  ‘ஈக்கள் மொய்த்த பண்டங்களை வாங்காதீர்கள்’
  உரு வழக்கு ‘எல்லோருடைய கண்களும் அவளையே மொய்த்தன’
  உரு வழக்கு ‘விமானத்தை விட்டு அமைச்சர் இறங்கியவுடன் நிருபர்கள் அவரை மொய்த்துக்கொண்டனர்’

மொய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொய்1மொய்2

மொய்2

பெயர்ச்சொல்

 • 1

  (திருமணம், காதுகுத்து போன்ற சடங்குகளின்போது) பரிசாக அளிக்கப்படும் பணம்.

  ‘மொய்ப் பணமாக ஐநூறு ரூபாய் எழுதலாம் என்று நினைக்கிறேன்’