தமிழ் மௌன அஞ்சலி யின் அர்த்தம்

மௌன அஞ்சலி

பெயர்ச்சொல்

  • 1

    இறந்துபோன ஒருவரைக் கௌரவிக்கும் முறையாக எல்லாரும் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக நின்று செலுத்தும் அஞ்சலி.

    ‘நமது தலைவரின் ஆன்மா சாந்தியடைவதற்காக எல்லாரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்’
    ‘விபத்தில் அகால மரணமடைந்த நமது வகுப்பு மாணவருக்கு நாம் எல்லோரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்’