தமிழ் மேடை யின் அர்த்தம்

மேடை

பெயர்ச்சொல்

 • 1

  (கலை நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம்.

  ‘அமைச்சர்கள் வரிசையாக மேடையில் அமர்ந்திருந்தனர்’

 • 2

  (வீடு, கோயில் போன்றவற்றில்) சற்று உயர்த்திக் கட்டப்பட்ட அமைப்பு.

  ‘மேடையில் குடம் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது’
  ‘லிங்கம் அமைந்திருக்கும் மேடையை ஆவுடையார் என்று அழைப்பார்கள்’